`மனிதாபிமான முறையில் உக்ரைனில் உதவிகள் செய்கிறோம்”- அன்னதானம் செய்யும் ஆன்மிக அமைப்பு

`மனிதாபிமான முறையில் உக்ரைனில் உதவிகள் செய்கிறோம்”- அன்னதானம் செய்யும் ஆன்மிக அமைப்பு
`மனிதாபிமான முறையில் உக்ரைனில் உதவிகள் செய்கிறோம்”- அன்னதானம் செய்யும் ஆன்மிக அமைப்பு

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனில், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகளையும் செய்து வருவதாக ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் ஆன்மிக அமைப்பு தெரிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் `ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திர் ஆன்மிக அமைப்பை’ச் சேர்ந்த தீர்த்தஸ்வரூப்தாஸ் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி கடந்த 27ஆம் தேதியன்று சாது பிரம்மவிஹாரிதாஸை தொடர்பு கொண்டு, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவிடுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறியுள்ளார். உலகளவில் அவசரகால சேவை மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் தங்களது அமைப்புக்கு பன்நெடுங்கால அனுபவம் இருப்பதால், உக்ரைன் உடனான போலந்து, ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளின் எல்லைகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பின் சார்பாக போலந்து நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரில், நடமாடும் சமையற்கூடம் அமைக்கப்பட்டு அதன்மூலம் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசுடனும், உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு தங்குமிடம் மற்றும் மருத்துவத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாக தீர்த்தஸ்வரூப்தாஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com