Published : 02,Mar 2022 08:07 PM

உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி - தாமதமாகுமா எல்.ஐ.சியின் பொதுப்பங்கு வெளியீடு?

Ukraine-crisis-Govt-may-defer-LIC-IPO

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பொதுப் பங்கு வெளியீட்டை மத்திய அரசு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட்டின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். அதன்படி மார்ச் மாத இறுதிக்குள் எல்.ஐ.சியின் பொதுப்பங்குகளை வெளியிட்டு அதன்மூலம், 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

image

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதால் சர்வதேச அளவில் இந்தியா உள்ளிட்ட மற்ற அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. எனவே எல்.ஐ.சி பங்கு வெளியீட்டுக்கு இது சரியான தருணம் இல்லை என்று அரசு கருதுவதாகவும், சந்தைகளின் போக்குக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்