Published : 02,Mar 2022 02:33 PM

பரபரப்பாக ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள்: காரணம் இதுதான்

Incumbent-councilors-come-in-wearing-helmets-this-is-the-reason

ஹெல்மெட் அணிந்து வந்து பதவியேற்ற கவுன்சிலர்கள் அடுத்த சில நிமிடங்களில் டெம்போ ட்ராவலர் வேனில் மின்னல் வேகத்தில் பறந்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக 10 உறுப்பினர்களை பெற்று தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. திமுகவினர் கடும் முயற்சி செய்து அதனை தடுக்க முயன்று வருவதாக அதிமுக தரப்பினர் புகார் கூறுகின்றனர். பதவியேற்க வந்தால் அதிமுக உறுப்பினர்களின் மண்டையை உடைப்போம் என மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது.

image

அதனால் பாதுகாப்பு கருதி ஹெல்மட் அணிந்து வந்த கவுன்சிலர்கள் அவசர அவசரமாக பதவியேற்று வந்த வாகனத்தில் மின்னல் வேகத்தில் சிட்டாக பறந்தனர். அவர்கள் வந்த வாகனத்திற்கு முன்பாக மாவட்ட அமைப்புச் செயலாளரின் காரும் பின்புறமாக பாதுகாப்புக்கு வந்த காரும் என பயங்கர பாதுகாப்போடு கவுன்சிலர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்