பொதுக்குழுவை கூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தினகரனுக்கு அதிகாரமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவரே தினகரன் என்றும், பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடர தினகரனுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார். அத்துடன் 3ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் அனுமதியோடு தான் பொதுக்குழு கூட்டப்படுவதாகவும், அதிமுக 100 சதவித ஒற்றுமையோடு செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக தினகரன் வெளியிட்டிருந்த அறிக்கையில் முதலமைச்சர் பழனிச்சாமி அணியினர் கூட்டும் பொதுக்குழுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அத்துடன் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் பொதுச் செயலாளர் மட்டுமே கூட்ட முடியும் என்றும், சசிகலா கூட்டும் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் உண்டு என்றும் தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தினகரன் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!