Published : 01,Sep 2017 07:26 AM
ப்ளுவேல்- மதுரைக்கிளை விசாரணை

ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது.
இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் இந்த விளையாட்டை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தடைசெய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரைக்கிளையில் முறையீடு செய்திருந்தார். இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யவும் அவர் அனுமதி கோரியிருந்தார். அப்போது, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கவுள்ளதாக கூறியது. வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறவுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நேற்று மதுரையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ப்ளுவேல் விளையாட்டு உயிரிழந்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது.