நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினியுடன் இணையும் வடிவேலு?

நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினியுடன் இணையும் வடிவேலு?
நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினியுடன் இணையும் வடிவேலு?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி - வடிவேலு கூட்டணி என்றாலே அனைவருக்கும் ‘சந்திரமுகி’தான் நினைவுக்கு வரும். வடிவேலுவுக்கு காமெடிக் காட்சிகளில் டஃப் ஃபைட் கொடுத்திருப்பார் ரஜினி. சந்திரமுகியின் வெற்றிக்கு அதன் கதை ஒரு காரணமாக இருந்தாலும் வடிவேலு - ரஜினி காமெடி காம்போவும் பலமாக இருந்தது. இதேகூட்டணி மீண்டும் வாசு இயக்கத்தில் ‘குசேலன்’ படத்தில் இணைந்திருந்தனர். திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வடிவேலு காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தது.

அதன்பிறகு, கடந்த 14 ஆண்டுகளாக ரஜினி - வடிவேலு வனவாசம் போல் இணையாமலே இருக்கிறார்கள். இந்த நிலையில், நெல்சன் இயக்கும் ரஜினியின் 169 வது படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் பாணியிலேயே இப்படமும் டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகவுள்ளது என்று சொல்லப்படுகிறது.

ரஜினியின் 169 வது படமாக உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். வரும் ஆகஸ் மாதம் துவங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது முன் தயாரிப்புப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com