Published : 01,Mar 2022 05:40 PM

சிவகாசி: கூண்டோடு திமுகவில் ஐக்கியமான அதிமுகவில் வென்ற மாநகராட்சி உறுப்பினர்கள்!

9-AIADMK-members-joined-DMK-makes-AIADMK-number-as-two-in-Sivakasi

சிவகாசி மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 9 மாமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது - வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற்றது மாநிலம் முழுவதும் பெருவாரியான வெற்றிகளை திமுக கைப்பற்றியது. அதில் முதல்முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசியில், பெண் மேயருக்கான தேர்தல் நடைபெற்றது.

image

48 வார்டுகளைக் கொண்ட சிவகாசி மாநகராட்சியில் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 48 இடங்களில் நடந்த போட்டியில், அதிமுக 11 இடங்களையும்; திமுக 24 இடங்களையும்; மதிமுக 1 இடத்தையும்; காங்கிரஸ் 6 இடங்களையும்; விசிக 1 இடத்தையும்; பிஜேபி 1 இடத்தையும்; சுயேச்சை - 4 இடங்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 9 பேர் அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இதன்மூலம் மாநகராட்சியில் அதிமுகவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுகவினர் திமுகவில் இணைந்து வருவது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபத்திய செய்தி: “வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை வைக்கும் மெக்கானிக்கை பிடிங்க ” - சென்னை கமிஷனர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்