Published : 01,Mar 2022 12:26 PM

தன்னுடைய அம்மாவுக்கு திடுக்கிடும் தகவலை பகிர்ந்த ரஷ்ய வீரரின் கடைசி 'மெசேஜ்' - அது என்ன?

Mummy-this-is-so-hard-we-are-even-targeting-Civilians-in-Ukraine-Russian-Soldier-s-last-message-to-his-mother-before-losing-his-life

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துள்ளது ரஷ்யா. கடந்த வியாழன் முதல் உக்ரைனில் தங்கள் படைகளை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது ரஷ்ய ராணுவம். இந்நிலையில் இந்த போரில் பங்கேற்றிருந்த ரஷ்ய நாட்டு ராணுவ வீரர் ஒருவர் தனது அம்மாவுக்கு உருக்கமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அது அவர் அனுப்பிய கடைசி மெசேஜும் கூட. அதற்கு பின்பு அவர் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். 

image

“அம்மா நான் இப்போது உக்ரைனில் உள்ளேன். இங்கு இந்த நாடே யுத்த களமாக மாறி நிற்கிறது. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து நகரங்கள் மீதும் நாங்கள் குண்டுகளை வீசி வருகிறோம். நாங்கள் டார்கெட் செய்பவர்களில் பொதுமக்களும் உள்ளனர். 

உக்ரைன் மக்கள் எங்களை வரவேற்பார்கள் என முன்னதாக எங்களிடம் சொல்லியிருந்தனர். ஆனால் இங்கு நடப்பது வேறாக உள்ளது. எங்களை தடுக்க அவர்கள் தற்கொலை படைகளாக மாறி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் எங்களை நோக்கி ‘பாசிசவாதிகள்’ என சொல்கின்றனர். மிகவும் கடினமாக உள்ளது. நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்” என அந்த ராணுவ வீரர் தனது அம்மாவுக்கு கடைசியாக மெசேஜ் அனுப்பியுள்ளார். 

 

இதனை உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து நடைபெற்ற அவசரகால ஐ.நா அமர்வில் படித்து காட்டியுள்ளார் உக்ரைன் நாட்டு தூதுவர். இந்த போரில் இதுவரை 4500 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்