Published : 27,Feb 2022 04:40 PM
நாட்டுக்கு தேவை துரித நடவடிக்கை; பிரதமர் செய்வதோ...! - ராகுல் காந்தி சாடல்

'நாட்டுக்கு தேவையோ துரிதமான நடவடிக்கை; ஆனால் பிரதமர் செய்வதோ திசை திருப்புதல்' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளதாவது:-''நாட்டுக்கு தேவையோ துரிதமான நடவடிக்கை; ஆனால் பிரதமர் செய்வதோ திசை திருப்புதல்''.
முன்னதாக உக்ரைனில் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கும் கர்நாடக மாநில மாணவிகளின் வீடியோவைம் பகிர்ந்திருந்த ராகுல் காந்தி, ''உக்ரைனில் இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளில் இருக்கும் காணொலிகள் கவலை அளிப்பதாக உள்ளது. ரஷிய படைகள் கடுமையாக தாக்கும் கிழக்கு உக்ரைனில் பல மாணவர்கள் சிக்கியுள்ளனர். எனவே, இந்திய மாணவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க: உக்ரைனில் சிக்கிய மாணவி; பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி தந்தையிடம் ரூ41 ஆயிரம் மோசடி!