Published : 26,Feb 2022 10:18 PM

ஐபிஎல் 2022: பயிற்சிக்கு சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்

CSK-to-start-practice-from-March-2-in-Surat-ahead-of-IPL-2022

எதிர்வரும் ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 26 தொடங்கி மே 29 வரையில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் மார்ச் 2-முதல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சூரத் நகரில் சுமார் 20 நாட்களுக்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இதனை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. மும்பை மைதானங்களில் உள்ள அதே மண்ணை கொண்டு இந்த சூரத் மைதானத்தின் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

கேப்டன் தோனி உட்பட பிராவோ, ஜடேஜா மாதிரியான பெரிய தலைகள் இந்த பயிற்சியில் இணைவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் சென்னை அணி களம் காண்கிறது. 

2020 சீசன் முதல் சுற்று போட்டிகள் குரூப் சுற்றுகளாக நடைபெறுகிறது. பிரிவு ‘B’-யில் இடம்பெற்றுள்ள சென்னை அணி ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை அணிகளுடன் முதல் சுற்றில் தலா 2 போட்டிகளில் விளையாடும். கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் லக்னோ அணிகளுடன் தலா ஒரு போட்டிகளில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்