புனித் ராஜ்குமார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

புனித் ராஜ்குமார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!
புனித் ராஜ்குமார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் விஜய்.

46 வயதான கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. 

இதனால், நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஷால், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்தும் நினைவிடத்திற்குச் சென்றும் ஆறுதலும் அஞ்சலியும் செலுத்திய நிலையில், இன்று நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தீபாராதனைக் காட்டி அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்தும்போதும், அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வரும்போதும் விஜய் கண்கலங்கியபடி வருவது அவரது ரசிகர்களை உருக வைத்துள்ளது.  அவருடன், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com