Published : 26,Feb 2022 01:04 PM

ரஷ்யா - உக்ரைன் போர்: கச்சா எண்ணெயை வேகமாக கொள்முதல் செய்யும் இந்தியா

India-purchased-60-lakh-parallel-crude-oil-from-Russia

உக்ரைன் - ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் சூழலில், குறைவான விலையில் கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் வேகவேகமாக கொள்முதல் செய்து வருகிறது.

உக்ரைன் - ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2014க்குப் பிறகு ஒரு பேரல் 100 டாலரை தாண்டியது. இந்நிலையில், பொருளாதாரத் தடைகள் எதிரொலியாக ரஷ்யாவின் உரால்ஸ் கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரசிக் வழியாக கொண்டுவரும் வகையில், கடந்த சில நாட்களில் மட்டும் 60 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ளது.

image

இது கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா கொள்முதல் செய்யும் அதிகபட்ச கச்சா எண்ணெய் அளவாகும். சூயஸ்மேக்ஸ் கப்பல் மூலம் தலா 1 லட்சம் பேரல்களை 6 முதல் 8 முறை மார்ச் மாதத்திற்குள் இந்தியா கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏற்றத்தைத் தவிர்க்க, அதிகளவு கச்சா எண்ணெயை இந்தியா இருப்பு வைத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்