சாலையில் ஓடிய கார்... நெருங்கி வந்த பீரங்கி: என்ன செய்தார்கள் ரஷ்ய வீரர்கள்?

சாலையில் ஓடிய கார்... நெருங்கி வந்த பீரங்கி: என்ன செய்தார்கள் ரஷ்ய வீரர்கள்?
சாலையில் ஓடிய கார்... நெருங்கி வந்த பீரங்கி: என்ன செய்தார்கள் ரஷ்ய வீரர்கள்?

கார் ஒன்றின் மீது ராணுவ பீரங்கியை ரஷ்ய வீரர்கள் மோதச் செய்த நிகழ்வு உக்ரைனில் போர்க்களத்தின் கொடூரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர். இந்நிலையில் தலைநகர் கீவ் பகுதியில் முதியவர் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ரஷ்ய வீரர்கள், முதியவரின் கார் மீது தங்களது ராணுவ பீரங்கி வாகனத்தை ஏற்றினர். இந்த கொடூரக் காட்சியை அங்குள்ள கட்டடத்தில் இருந்த ஒருவர் ரகசியமாக பதிவு செய்துள்ளார். ரஷ்யாவின் ராணுவ வாகனம் ஏறியதால் கார் நொறுங்கியபோதிலும் உக்ரைனைச் சேர்ந்த அந்த முதியவர் காயங்களுடன் உயிர்தப்பினார். இதனிடையே கார் மீது மோதியது உக்ரைனைச் சேர்ந்த ராணுவ வாகனம் என ரஷ்ய ஆதரவாளர்கள் சிலர் கூறிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com