Published : 25,Feb 2022 10:31 PM
உக்ரைனில் சிக்கி தவிக்கும் நெல்லை மாணவி - தமிழக அரசு உதவ பெற்றோர் கோரிக்கை
நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தீபஸ்ரீ என்ற மாணவி 20 நாட்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க உக்ரைன் சென்ற நிலையில் அங்கு சிக்கியுள்ளார். அவரை மீட்டுத்தர வேண்டும் என அவரது மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி மாணவி தீபஸ்ரீ மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றார். அங்கு உக்ரைனில் முதலாமாண்டு படித்து வரும் மருத்துவ மாணவி அங்கேயே சிக்கியுள்ளார். மேலும், கல்லூரி விடுதியில் மாணவி தீபஸ்ரீ முடங்கியுள்ளார்.
இந்நிலையில், மகளை மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 'மத்திய அரசும், தமிழக அரசும் முன்வந்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.