Published : 25,Feb 2022 05:28 PM

'எங்கள் நிலத்தில் என்ன செய்கிறீர்கள்?'-ரஷ்ய ராணுவ வீரர்கள் முன் சீறிய உக்ரைன் சிங்கப்பெண்!

Ukrainian-Woman-Confronts-Russian-Soldiers--Hailed-As-Fearless

உக்ரைன் பெண் ஒருவர் ரஷ்ய ராணுவ வீரர் முன் சீறும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்ய படைகள் படிப்படியாக முன்னேறி வருகின்றன. 'உக்ரைன் ஒருபோதும் அதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது' என அந்நாட்டு பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதே உறுதியுடன் அந்நாட்டு குடிமக்களும் உள்ளனர் என்பதற்கு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ உறுதிபடுத்தியுள்ளது. அந்த வீடியோவில், துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு மிரட்டும் தொனியில் ரஷ்ய ராணுவ வீரர் நின்றுகொண்டிருக்கிறார்.

image

அவருக்கு முன்னாள் நிற்கும் உக்ரைனிய பெண் ஒருவர், 'எனக்கு பயமில்ல' என்பதைப்போன்ற தோரணையில் நின்றிருக்கிறார்.அந்த பெண்ணிடம் சிறிய பயம் கூட இல்லை. அந்த பெண் ராணுவ வீரரிடம், 'யார் நீங்கள்?' என கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த வீரர், 'எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்த பக்கமாக செல்லுங்கள்' என்று பதிலளிக்கிறார்.

ஒருகட்டத்திற்கு பிறகு அவர்கள் ரஷ்ய ராணுவ வீரர் என்பதை அறிந்துகொண்ட அந்த பெண், 'சோ வாட் தி ஃப*** நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று சீறுகிறார். உயர் ரக துப்பாக்கிகளை சுமந்து நிற்கும் அவர், அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்.

"நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள், நீங்கள் பாசிஸ்டுகள்! இந்த துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு எங்கள் நிலத்தில் என்ன செய்கிறீர்கள்?. நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்றால் சூரியகாந்தி பூக்கள் மலரும்" என்கிறார் கோபத்துடன். சூரியகாந்தி பூ என்பது உக்ரைனின் தேசிய மலர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்