'அம்மா அப்பா ஐ லவ்யூ' - உக்ரைன் ராணுவ வீரரின் உருக்கமான வீடியோ

'அம்மா அப்பா ஐ லவ்யூ' - உக்ரைன் ராணுவ வீரரின் உருக்கமான வீடியோ
'அம்மா அப்பா ஐ லவ்யூ' - உக்ரைன் ராணுவ வீரரின் உருக்கமான வீடியோ

உக்ரைனில் உச்சகட்டமாக போர் நடந்து வரும் நிலையில், 'அம்மா, அப்பா ஐ லவ் யூ என உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணை மழை பொழிந்து வரும் நிலையில், ராணுவ தளங்கள் தகர்கப்பட்டு வருகின்றன. 137 பேர் இறந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டாங்கிகள், கடற்படை கப்பல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் என மூன்று புறத்திலிருந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் ராணுவ வீரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உருக்கமான இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் பேசும் அவர், "அம்மா, அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்," என 13 வினாடி ஓடும் அந்த வீடியோவில் பேசுகிறார். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், "எங்களுக்கு உங்களைத் தெரியாது, ஆனால் நாங்கள் உன்னை நேசிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com