Published : 31,Aug 2017 03:36 PM
மக்களை நம்பாமல் ட்விட்டரை நம்புகிறார்: கமல் பற்றி ஜெயக்குமார் கமெண்ட்

நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களை நம்பாமல், ட்விட்டரை நம்பி அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தலைவர்களெல்லாம் தியாகம் செய்து மக்களை சந்தித்து, கொட்டும் மழையிலும் மக்களோடு மக்களாக இருந்து, தொண்டரோடு தொண்டராக இருந்து, இயக்கத்தை வளர்த்து அரசியல் செய்தார்கள். ஆனால் கமல்ஹாசன் ட்விட்டரில் கட்சி ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லும்போது, அவர் தொண்டர்களையோ, பொதுமக்களையோ நம்பி இல்லை. ட்விட்டரை நம்பித்தான் கமல்ஹாசன் இருக்கிறார் என்பதுதான் நிதர்னமான உண்மை. ஏட்டுச்சுரைக்காய் கரிக்கு உதவாது” என்று கூறினார்.