Published : 24,Feb 2022 04:03 PM
நாஜி படைகளைப் போல தாக்குகிறார்கள் - உக்ரைன் பிரதமர் கவலை

ரஷ்யா உக்ரைனை நாஜி ஜெர்மனியைப்போல தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரைனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குடிமக்கள் அமைதியாக இருக்கவும். இந்த நாடு எப்போதும் அதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது. உங்கள் வீடுகளையும், நகரங்களையும் பாதுகாக்க தயாராக இருங்கள். உக்ரைன் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது.
சுதந்திரம் மிக உயர்ந்த மதிப்புடையது. இரண்டாம் உலகப்போரின்போது, நாஜி ஜெர்மனி தாக்குதல் நடத்தியதைப்போல, ரஷ்யா எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.