Published : 24,Feb 2022 03:36 PM
சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களுக்கும் மார்ச் 10 வரை சிறை - இலங்கை நீதிமன்றம்

நாகை, காரைக்கால் பகுதி மீனவர்களை வருகின்ற 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை, காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசை படகையும் அதில் இருந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதனர். இந்நிலையில், அவர்களை விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 22 மீனவர்களை வருகின்ற 10ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறபித்துள்ளார்.