ரஷ்யா இடைவிடாது தாக்குதல் - உக்ரைன் பதில் தாக்குதல்.. ஏராளமான உயிரிழப்புகள்-நடப்பது என்ன?

ரஷ்யா இடைவிடாது தாக்குதல் - உக்ரைன் பதில் தாக்குதல்.. ஏராளமான உயிரிழப்புகள்-நடப்பது என்ன?
ரஷ்யா இடைவிடாது தாக்குதல் - உக்ரைன் பதில் தாக்குதல்.. ஏராளமான உயிரிழப்புகள்-நடப்பது என்ன?

உக்ரைன் நாட்டின் விமானத் தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணி நேரமாக உக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. அதுதொடர்பான காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன.'ரஷ்யாவுக்கு பதிலடி' - பிரிட்டன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு உரிய பதிலடி தரப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

5 ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்து

தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்கும் நிலையில் அதற்கு தங்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது.கார்கிவ் மீது இடைவிடாது தாக்குதல்

உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படையினர் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. கீவ் விமான நிலையம் மற்றும் ராணுவ தளங்களை ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது ரஷ்யா.

திணறும் உக்ரைன் படைகள்

கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: “யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவு தான்” - ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com