Published : 23,Feb 2022 05:36 PM

குறுகிய கால தினசரி டைம் லிமிட் ஆப்ஷனை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

Instagram-to-remove-shorter-daily-time-limit-feature-option-says-report

போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைத்தளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளம் சத்தமே இல்லாமல் தனது பயனர்களின் குறுகிய கால தினசரி டைம் லிமிட் ஆப்ஷனை மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் மேக் ரூமர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

image

இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும் போது ஒரு பாப் அப் வருவதாகவும். அதில் பயனர்கள் முப்பது நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் வரை தினசரி டைம் லிமிட் ஆப்ஷனை செட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். கடந்த 2018 வாக்கில் இன்ஸ்டாகிராம் தளம் டைம் லிமிட் ஆப்ஷனை அறிமுகம் செய்தது. அப்போது குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

image

இன்ஸ்டா தளத்தின் பயனர்களின் நலன் கருதி இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதாக 2018-இல் சொல்லியிருந்தது இன்ஸ்டா நிறுவனம். சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் நேரம் செலவிட்டு வருவதை குறித்து விமர்சனம் வந்திருந்த நிலையில் இன்ஸ்டா அதை செய்திருந்தது. இருந்தாலும் இன்ஸ்டா டைம் லிமிட் ஆப்ஷனை மாற்ற காரணமாக மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால் கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்