[X] Close

100 ஆண்டு பழமை வாய்ந்த ஏரியை தனி ஆளாக தூர்வாரும் மனிதர்

A-100-year-old-lake-is-a-man-who-is-a-unique-man

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 520 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை நம்பி 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அனுப்பன்குளம், மீனம்பட்டி, ஆண்டியாபுரம், பேராபட்டி, சுந்தரராஜபுரம், பாறைப்பட்டி  உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக தூர் வாரப்படாத இந்த கண்மாயை தனி நபராக தனது சொந்த செலவில் தூர் வாரும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார் பாண்டியராஜன் என்பவர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த பாண்டியராஜன் தனது வருமானத்தில் ஒரு பங்கை கொண்டு இந்த மராமத்து பணியினை செய்து வருகிறார். பருவமழை துவங்கும் முன்னர் முடிக்க வேண்டும் என்பதால் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார் அவர். இவரது பணியை கிராம மக்கள் வரவேற்கிறார்கள்.

பாண்டியராஜனின் முயற்சிகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்துவருவதாகக் கூறும் பொதுமக்கள், இந்த பணிகள் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்கிறார்கள்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close