[X] Close

ட்விட்டர் டிரெண்டில் தோனியின் ’300’ சாதனை

Dhoni-s--300--record-in-the-Tweet-Trends

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி 300-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளது இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டில் (#Dhoni300) உள்ளது. தோனிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து செய்திகளை குவித்து வருகின்றனர். தோனியின் சிறப்பான ஆட்டம், ஸ்டெம்பிங் வீடியோக்களை ரசிகர்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒருநாள் போட்டிக்கான தொப்பியை 300-வது முறை போடுவது நிச்சயமாக ஒரு சிறப்பான சாதனைதான் உங்களுக்கு இன்று சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

ரெய்னா தனது ட்விட்டரில், "ஐகானிக் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தோனி 300-வது போட்டியில் விளையாடுகிறார். என்னை எப்பொழுதும் ஊக்குவிக்கும் அவருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

முன்னாள் வீரர் ஹேமங் பதானி, ”தோனியால் சாதனை செய்த பெருமையுடனும், திருப்தியுடனும் 300-வது போட்டியில் களமிறங்க முடியும். ஆனால் அவரை எனக்கு தெரியும். அவர் எப்பொழுதும் போல் அமைதியாகவும், பொறுமையாகவும்தான் இன்றும் இருப்பார். அவரிடம் எந்த வித்தியாசமும் இருக்காது” என்று சிலாகித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவான் 300-வது ஒருநாள் போட்டியில் அடி எடுத்து வைக்கிறார் என்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான தோனியின் சிறப்பான பினிசிங் ஆட்டத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அறிமுகமான தோனி, சிறந்த பேட்ஸ்மேனாக இதுவரை 9,608 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பராக வலம் வரும் அவர் 99 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close