Published : 22,Feb 2022 10:11 PM

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மகன் திடீர் கைது! காரணம் இதுதான்!

Pakistan-Prime-Minister-Imran-Khan-s-son-arrested-for-liquor-possession-and-later-released

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் மகன் மூஸா Maneka கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களது காரில் மது இருந்துள்ளது. 

image

மூஸா, பாகிஸ்தான் நாட்டு முதல் பெண்மணியான புஷ்ரா பீபியின் மகன். இம்ரான் கானை புஷ்ரா திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக தனது முன்னாள் கணவருடன் இணைந்து மூஸாவை ஈன்றெடுத்துள்ளார். ம் மூஸா கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்திய பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி மூலமாக நேருக்கு நேர் விவாதம் செய்ய விரும்புவதாக இம்ரான் கான் சொல்லியிருந்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்