Published : 22,Feb 2022 08:32 AM

வேலூர்: பாப்கார்னுடன் 'வலிமை' டிக்கெட் இலவசம்- அதிரடி அறிவிப்பு வழங்கிய கூட்டுறவு அங்காடி

Vellore-If-you-buy-groceries-you-will-get-a-free-movie-ticket

ரூ. 2999-க்கு மேல் மளிகை பொருள் வாங்கினால் அஜித்குமாரின் வலிமை படத்துக்கான டிக்கெட் இலவசம் என மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம் அறிவித்துள்ளது.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காகிதபட்டறை பகுதியில் செயல்பட்டு வருகிறது SIMCO எனும் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி. இங்கு வாடிக்கையாளர்களின் காவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்குவோருக்கு அஜித்குமார் நடிப்பில் உருவாகி தற்போது வெளியாக இருக்கும் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

image

அதில், 2999 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருள் வாங்குவோருக்கு காட்பாடி சில்க் மில்லில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியாகும் வலிமை படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்