தென்காசி மாவட்டம் புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவில் போலீஸ் உதவியுடன் திமுகவினர் காரில் ஊடுருவியதாகக்கூறி அதிமுக உட்பட அனைத்துக்கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புளியங்குடி நகராட்சி மற்றும் வாசுதேவநல்லூர், ராயகிரி, சிவகிரி ஆகிய 3 பேரூராட்சிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் உதவியுடன் நள்ளிரவில் கார் ஒன்று உள்ளே சென்றுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் போலீஸ் உதவியுடன் திமுகவினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றதறாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து திமுக மற்றும் போலீசாரை கண்டித்தும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்குள் போலீஸ் ஜீப்பும் அதனருகே டி.என்.79 கு 5550 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றும் நின்று கொண்டிருந்தது.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி திமுகவினர் உள்ளே சென்றதாக அவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். உயரதிகாரிகள் வரும்வரை அங்கிருந்து செல்லமாட்டோம் எனக் கூறினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் வீராசாமி செட்டியார் கல்லூரியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'