Published : 20,Feb 2022 05:58 PM

‘மெட்டாவெர்ஸில் வீடு வாங்க போறேன்’ - வீடு விற்பனையில் மிரட்டும் வெர்ச்சுவல் உலகம்!

At-the-same-time-a-mansion-in-Britain-is-to-be-sold-in-the-real-life-as-well-as-Metaverse-too-and-this-was-the-world-s-first-such-move--

“மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்

மெரினாவில் வீடு கட்ட போறேன்

லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்

நான் மங்காத்தா ராணி போல வாரேன்!” என்ற பாடலை அப்படியே மாற்றி,

‘வெர்ச்சுவல் உலகை சுத்தி பார்க்க போறேன்.

மெட்டாவெர்ஸில் வீடு வாங்க போறேன்’ என பாடும் அளவிற்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் உலகிலேயே முதல் முறையாக மாட மாளிகை ஒன்று மெட்டாவெர்ஸ் மற்றும் நிஜ வாழ்க்கையில் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள மாளிகை ஒன்றுதான் இந்த புதிய முறை விற்பனைக்கு வந்துள்ளது. 

image

Stately Homes என்ற பிராப்பர்டி டெவலப்பர் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. தங்களது உடமையை வாங்க விரும்புபவர்களுக்கு அந்த மாளிகையில் அப்படி என்ன உள்ளது என்ற தெளிவான புரிதலுக்காக அசலில் இருப்பதை போல சி.ஜி செய்யப்பட்டுள்ளது. 1.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையில் மொத்தம் 70 அறைகள் உள்ளதாம். அதில் 11 படுக்கை அறைகளும் அடங்கும். நீச்சல் குளம், மதுபானக் கூடம், உடற்பயிற்சிக் கூடம் மாதிரியானவை இதில் அடங்கும். மேலும் ஆறு கார்களை பார்க் செய்யும் வசதியும் இந்த மாளிகையில் உள்ளது. 

image

சுமார் 295 கோடி ரூபாய் மதிப்பில் இந்த இந்த மாளிகை விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ப்ளூ பிரிண்ட் மற்றும் வெர்ச்சுவல் வெர்ஷன் NFT வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்