Published : 19,Feb 2022 04:35 PM
'மிஸ் யூ அப்பா!..லவ் யூ' - தந்தையின் திருமண நாளில் பிரியங்கா சோப்ரா உருக்கம்

தனது பெற்றோரின் திருமண நாளையொட்டி பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது பிரியங்காவுக்கு 20வயது. தனது தந்தையின் இறப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தையின் வெற்றிடத்தை நிரப்ப அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில், தனது பெற்றோரின் திருமண நாளையொட்டி, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அத்தோடு நாஸ்டாலஜி புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், அவரது தந்தை, தாய் மது அகோரி சோப்ராவுக்கு ரோஜாப் பூ ஒன்றை வழங்குகிறார். இந்த புகைப்படத்தை பதிவுட்டுள்ள அவர், ''உங்கள் ஆண்டுவிழாவை நான் எப்போதும் இப்படித்தான் நினைவில் கொள்கிறேன். மிஸ் யூ அப்பா. லவ் யூ!'' என்று பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ராவை பொறுத்தவரை தன்னுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில் ஆர்வம் காட்டுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரியங்கா மற்றும் அவரது கணவர் நிக் ஜோன்ஸ் இருவரும் வாடகை தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தனர்'' என்றனர்.