Published : 31,Aug 2017 04:54 AM
அமைச்சர் காமராஜ்- டிடிவி ஆதரவாளர்கள் மோதல்: போலீஸ் குவிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே வலங்கைமானில் அமைச்சர் காமராஜ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அமைச்சர் காமராஜ் மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் கல் மற்றும் சோடா பாட்டில்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தை அடுத்து டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.