Published : 04,Jan 2017 09:23 AM

தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கன அடி நீர்: கர்நாடகத்திற்கு மீண்டும் உத்தரவு

Cauvery-issue--SC-orders-Karnataka-to-release-2-000-Cusecs-water-to-TN

காவிரி வழக்கில் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது தெரிவித்த பின்னர், இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வந்தது. இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்குகள் மீதான விசாரணை பிப்ரவரி 7 முதல் தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க 3 வாரம் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்