Published : 02,Feb 2017 04:11 AM
செல்போன், சிகரெட் விலை உயர வாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில், செல்போன் உற்பத்திப் பொருளுக்கு 2 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் செல்போன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
அதேபோல், வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பானுக்கான உற்பத்தி வரி 7.5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிப் பொருட்களுக்கு 12.5 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
பில்டர் இல்லாத சிகரெட்டிற்கு 12.5 சதவிகிதமும், பீடிக்கு 2.1 சதவிகிதமும் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயருகிறது. அதேபோல், புகையிலைக்கான உற்பத்தி வரி 4.2 சதவிகிதத்தில் இருந்து 8.3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலையும் அதிகரிக்கிறது.