அன்னவாசல் அருகே 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் விஷ்வா (22) என்ற இளைஞர் காதலிப்பதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அந்த இளைஞரை பலமுறை எச்சரித்துள்ளனர். இதனை ஏற்காத அந்த இளைஞர் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் விஷ்வாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix