[X] Close

டென்ஷனா, எங்களுக்கா..? மலிங்கா கூல்!

Malinga-to-lead-Sri-Lanka-in-fourth-ODI

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி பிற்பகல் இரண்டரை மணிக்குத் தொடங்குகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில், அடுத்த
இரு போட்டிகளிலும் வென்றால் தான், உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது. காயம் காரணமாக தொடரில் இருந்து கபுகேதரா விலகியுள்ளார். இதனால் மலிங்கா தலைமையில் இலங்கை அணி களமிறங்குகிறது.

இந்தப் போட்டி பற்றி மலிங்கா கூறும்போது, சில போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறோம். அதைப் பற்றி கவலைப்படாமல் இளம் வீரர்களுடன் அதிக நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம். எங்களுக்கு அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுக்கு எந்த டென்ஷனும் இல்லை. மனரீதியாக இளம் வீரர்களுக்கு பலத்தை அதிகரித்திருக்கிறோம்’ என்றார். 
இந்த போட்டியில் மலிங்கா ஒரு விக்கெட் எடுத்தால் அது அவரது 300-வது விக்கெட்டாக இருக்கும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close