Published : 16,Feb 2022 07:11 PM

’’சேலம் மாவட்டத்தில் மட்டும் திமுகவை ஏமாற்றி விட்டீர்கள்’ - ஆத்தூரில் உதயநிதி பேச்சு!

Udhayanidhi-Stalin-questions-Salem-people-why-the-did-not-vote-in-last-election

’’ஒட்டுமொத்த தமிழகத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள்; சேலம் மாவட்டத்தில் மட்டும் மக்கள் ஏமாற்றி விட்டீர்கள்’’ என ஆத்தூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவா்களும் தமிழகம் முழுவதும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பரப்புரை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டு வேட்பாளர்களையும் ஆதரித்து ராணிப்பேட்டை திடலில் வேனில் நின்றபடி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இங்கு பரப்புரையில் ஈடுபட்டபோது வாக்களிப்பதாகச் சொல்லி 11 சட்டமன்ற தொகுதியில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற வைத்தீர்கள். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக கூட்டணிக்கு வெற்றிபெற்ற நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏமாற்றி விட்டீர்கள் என பொதுமக்களிடம் பேசினார்.

image

image

தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் மட்டும் வாங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 9 மாத காலத்தில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டு இரண்டாவது கொரோனா அலையின்போது கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தியாவிலேயே தமிழக முதல்வர்தான் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றுள்ளார். எப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக திமுக ஆட்சி கலைந்துவிடுமென பரப்புரையில் பேசுகிறார். அவர் போல கூவத்துார் போய் காலில் விழந்து ஆட்சியை பிடிக்கவில்லை என்றும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி திமுக என்றும் கூறினார்.

image

மேலும், தேர்தல் பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் உதயநிதி ஸ்டாலினை காணவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் டேபிளுக்கு கீழே தேட வேண்டாம்; மேலே தேடினால் இருப்பேன். 9 மாத கால ஆட்சியில் முதல்வர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதோடு பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைத்து மகளிருக்கான இலவச பேருந்து வசதிகளை அறிவித்துள்ளார் முதல்வர். விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்” எனப் பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்