Published : 16,Feb 2022 06:10 PM

”சுசீந்திரன் முதல் மோகன்லால் வரை!” - இந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கலாம்?

Movies-to-be-released-this-week-in-February

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள ’வீரபாண்டியபுரம்’, மோகன்லாலின் ‘அராட்டு’ உள்ளிட்டப் படங்களும் நடிகர் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸும் இந்த வாரம் வெளியாகின்றன.

மோகன்லாலின் ’அராட்டு’!

’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் மோகன்லால் படம் ‘அராட்டு’. ‘த்ரிஷ்யம்’ சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். ‘லூசிஃபர்’, ‘த்ரிஷ்யம் 2’, சமீபத்தில் வெளியான ‘ப்ரோ டேடி’ படங்களே அதற்கு சாட்சி. இப்படங்களுக்காக மோகன்லாலைக் கொண்டாடித் தீர்த்தனர்.

’அராட்டு’ படத்திற்கு இப்படியொரு எதிர்பார்ப்பு என்றால், மற்றொருபுறம், வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் எகிறவைத்துள்ளது. சமீபத்தில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக கேரளாவே வெகுண்டெழுந்தபோது, ”பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம்.

வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதுதம் தவறு” என்று ‘ஆராட்டு’ படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு “வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்” என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராகப் பதிவிட்டிருந்தார் நடிகர் மோகன்லால். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதோடு ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் தெறிக்கவிட்டது. உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அராட்டு’ வரும்ப் பிப்ரவரி 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

image

சுசீந்திரன் - ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’!

‘ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு வெளியாகும் சுசீந்திரன் படம் ‘வீரபாண்டியபுரம்’. நாயகனாக ஜெய் நடித்துள்ளதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகாமியுள்ளார். இப்படத்தின், வசனங்களும் ‘காட முட்ட’ பாடலும் ஏற்கனவே கவனம் ஈர்த்ததால், படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி- 17 ஆம் தேதி நாளை தியேட்டர்களில் ‘வீரபாண்டியபுரம்’ வெளியாகிறது. ஜெய்யின் 30 வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட், திவ்யா துரைசாமி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

image

விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸ்!

‘கன்னிராசி’ படத்திற்குப் பிறகு விமல் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ் ‘விலங்கு’. இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸ் 7 எபிசோடுகளோடு ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸில் இனியா, முனிஷ்காந்த், பாலசரவணன், ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதில், ஏற்படும் திருப்பங்களே இந்தத் தொடர். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக துரைராஜ் பணியாற்றியுள்ளார். ஏற்கனவே, இதன் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், பிப்ரவரி 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ‘விலங்கு’ வெளியாகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்