[X] Close

தினகரன் தலைமையில் விரைவில் பொதுக்குழு: திவாகரன் தகவல்

Dhinakaran-soon-led-by-the-General-Council--Divakaran-Information

தினகரன் தலைமையில் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பொதுக்குழு என்று அவர்களே 2000 அடியாட்களை கூட்டி தீர்மானம் படித்து விட்டு போகலாம்.. இதனைப் போல் நாங்களும் செய்யலாம். எல்லாரும் செய்யலாம். அதிமுக பொதுச் செயலாளர் அறிவுரையின் பேரில் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுக்குழுவை கூட்ட வாய்ப்பு இருக்கிறது. விரைவில் பொதுக்குழுவை கூட்டுவோம்" என்றார்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலை 10.35 மணிக்கு நடைபெறும் என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது தினகரன் தலைமையில் விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என திவாகரன் கூறியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close