Published : 30,Aug 2017 11:43 AM

அமெரிக்காவில் புயல் தாக்கிய பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள்

Plundering-incidents-in-storm-hit-areas-in-the-US

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் முடங்கிய அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை கா‌ரணமாக ஹூஸ்டன் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதிக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளில்லாத வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரவு நேரங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்