Published : 12,Feb 2022 06:42 PM

ஒருவர் கூட ஏலம் கேட்கலையே..! ‘சின்னத் தல’-க்கு வந்த சோதனை - ஏன் இந்த நிலை?

Former-CSK-Player-Suresh-Raina-goes-unsold-in-IPL-2022-Mega-Auction-and-the-reactions-are-here

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்னத் தல’ என போற்றப்படுபவர் சுரேஷ் ரெய்னா. 2008 முதல் சென்னை அணியில் விளையாடி வருகிறார். தோனி படையின் தளபதி இவர். இடையில் 2016 மற்றும் 17 சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5528 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் களத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவர். 

image

இருந்தாலும் அவரை ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும் எடுக்கவில்லை. அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகும். கடந்த சீசனில் 11 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 160 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். 2020 வாக்கில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடாத காரணத்தால் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வராமல் போயிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

அசத்தலான ஃபீல்டர், பார்ட் டைம் ஸ்பின்னர் என களத்தில் ஆல்-ரவுண்ட் பர்ஃபாமென்ஸ் காட்டுபவர் சுரேஷ் ரெய்னா. நிச்சயம் ரெய்னா மட்டுமல்லாது சென்னை அணி ரசிகர்களும் அவரை இந்த சீசனில் மிஸ் செய்வார்கள். 

“முதல் ரவுண்டில் மிஸ்டர் ஐபிஎல் என போற்றப்படும் ரெய்னாவை யாருமே ஏலம் எடுக்க முன்வராதது வருத்தம்தான்” என சொல்லியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். 

“காலம் மாறிப்போனது. ஐபிஎல் களத்தில் ஜாம்பவானான ரெய்னா ஏலம் போகவில்லை” என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்