Published : 12,Feb 2022 04:00 PM

மயங்கி விழுந்த ஏலதாரர் எட்மேட்ஸ் எப்படி இருக்கிறார்? - ஐபிஎல் நிர்வாகம் கொடுத்த அப்டேட்!

IPL-Mega-Auction-Auctioneer-Hugh-Edmeades-Health-Update

பெங்களூர் நகரில் ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தை ஹூக் எட்மேட்ஸ் நடத்தி வந்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டு ஏலத்தின் போது திடீரென நிலை தடுமாறி விழுந்தார். அதனால் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. 

ரத்த அழுத்தம் (Postural Hypotension) காரணமாக அவர் நிலை தடுமாறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நிலையாக இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு பதிலாக சாரு ஷர்மா ஏல நடைமுறையை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகம் ட்வீதி மூலம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2018 முதல் அவர் ஐபிஎல் ஏலத்தை முன்னின்று ஏலதாரராக நடத்தி வருகிறார். மிகவும் துடிப்புடன் அவர் தனது பணியை கவனித்து வந்தார். 36 ஆண்டுகளாக அவர் ஏலம் விடும் பணியை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்