Published : 12,Feb 2022 12:31 PM

ஏலத்தில் அஷ்வினை மிஸ் செய்த சிஎஸ்கே: தட்டி தூக்கிய ராயல்ஸ்! ஏலத்தொகை எவ்வளவு?

----Rajasthan-royals-bought-Ravi-Ashwin-for-5-crores-in-IPL-mega-Auction----------

பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இரண்டாவது வீரர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகும். 

image

சென்னை, புனே, பஞ்சாப், டெல்லி அணிக்காக அஷ்வின் ஐபிஎல் களத்தில் விளையாடி உள்ளார். 167 போட்டிகள் விளையாடியுள்ள அஷ்வின் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 

இந்த சீசன் சுழலுக்கு சாதகமான இந்தியாவில் நடைபெறுகிறது. அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரமான ஸ்பின்னரான அஷ்வினை ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது. இந்த சீசனில் அவர் பிங்க் ஜெர்சியில் ஜொலிக்க உள்ளார். 

தவானை பஞ்சாப் அணியும், கம்மின்ஸை கொல்கத்தா அணியும் வாங்கியுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்