கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன? - முதல்வர் இன்று ஆலோசனை

கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன? - முதல்வர் இன்று ஆலோசனை
கொரோனா ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன? - முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு, வரும் 15ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் அதனை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி, பொருட்காட்சி நடத்த தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ள சூழலில் அதற்கு தளர்வு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள், அரசின் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இந்த கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com