Published : 12,Feb 2022 08:19 AM

சென்னை: வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகை கொள்ளை

Chennai-26-shaving-gold-jewelry-robbery-by-breaking-the-lock-of-the-house

வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்கநகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து திரும்பிய அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

image

இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவசுப்பிரமணியன் உடனடியாக வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்