கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும், மறைந்த புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
கன்னட திரையுலகில் ரசிகர்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் புனீத்துக்கு ஏற்பட்ட மரணம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
நடிகர் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள படம் ‘ஜேம்ஸ்’. சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன், ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு, அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் தான் பின்னணின் குரல் கொடுத்துள்ளார்.
மேலும், புனீத்தின் சகோதரர்கள் சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ‘ஜேம்ஸ்’ படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப்படம் வெளியாகும் தினத்தில் வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக்கூடாது என கன்னட திரைப்பட நடிகர் சங்கத்தினர் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், ’ஜேம்ஸ்’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அசத்தலான ஆக்ஷன் காட்சிகளுடன் டீசரில் தன் நடிப்பால் ரசிகர்களை அசர வைத்துள்ளார் புனீத் ராஜ்குமார். இதற்குப் பிறகு புனீத் ராஜ்குமாரை வேறுப் படங்களில் பார்க்க முடியாததால், அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai