தனுஷின் ‘நானே வருவேன்’ புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்திலும், ‘வாத்தி’ பை-லிங்குவல் படத்திலும் நடித்து வருகிறார். இதில், ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்தது படக்குழு. தற்போது‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை உறுதி செய்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, தனுஷ் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் தாடி எடுத்து இளமை துடிப்புடன் தனுஷ் கவனம் ஈர்க்கிறார். அதேசமயம், தாடி வைத்திருக்கும் தனுஷின் கெட்டப் செயற்கையாய் மனதில் ஒட்டவில்லை.
இந்தப் போஸ்டரை வெளியிட்டவுடன் ‘இது ஒரிஜினல் போஸ்டரா.. இல்ல ஃபேன் மேட் போஸ்டரா’... ’என்ன கண்றாவி இது’, ‘ போஸ்டரே படத்தின் தரத்தை சொல்கிறது’, ’என்ன இது அஃபிஷியல்தானே?’ என்றெல்லாம் தங்கள் அதிருப்தியினை செல்வராகவன் வெளியிட்டுள்ள பதிவில் கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அதேசமயம், போஸ்டரை ’தரமான சம்பவம்’ என்று பாராட்டியும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai