நடிகை, இயக்குநர் என்று பன்முகத்திறமை கொடண்ட நடிகை ரேவதியின் இயக்கத்தில், நடிகை கஜோல் திரைப்படமொன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
நடிகை ரேவதி இதற்கு முன்னர் ‘மித்ர், மை பிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’, ’மும்பை கட்டிங்’உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ள நிலையில், 5 வது படமாக கஜோல் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்திற்கு, `சலாம் வெங்கி’ என பெயரிட்டிருக்கின்றனர்.
இன்று படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் ரேவதி.
தனது அப்பதிவில் அவர் ”சொல்லப்பட வேண்டிய ஒரு கதையுடன், செல்ல வேண்டிய ஒரு பாதையில், கொண்டாடப்பட வேண்டிய ஒரு வாழ்க்கையை உங்களுடன் பகிர, எங்கள் பயணத்தை இன்று தொடங்குகிறோம். `சலாம் வெங்கி’, நம்ப இயலாத உண்மைக் கதையாகும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். இப்படத்தின் இரு பெரும் துருவங்கள், `பி லிவ் ப்ரோடக்ஷன்’ நிறுவனத்தின் சுராஜ் மற்றும் ஷ்ரதா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தை `பி லிவ் ப்ரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு - தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்வதென்ன?
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide