கேரளாவில் 42 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

கேரளாவில் 42 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?
கேரளாவில் 42 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

கேரளாவைச் சேர்ந்த 42 வயது பெண்மணி, ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கோட்டயம் அருகே அதிரம்புழாவைச் சேர்ந்த பிரசன்னா குமாரி - சுரேஷ் தம்பதிக்கு, நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லை. இதில் மனம் தளர்ந்திருந்த இந்தத் தம்பதி, கோட்டயத்தில் உள்ள மகப்பேறு மருத்துவர்களை அணுகியிருக்கின்றனர். அவர்கள் அளித்த செயற்கை கருவூட்டல் சிகிச்சையின் மூலம், பிரசன்னா குமாரி கருவுற்றிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன் அதே மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது.

அதில் பிரசன்னா குமாரி 4 குழந்தைகளை பிரசவித்தார். தனது முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த தாய், தனது 4 குழந்தைகளுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் அழுகைக் குரலுக்காக காத்திருந்த பிரசன்னா குமாரியின் இல்லம், இப்போது 4 குழந்தைச் செல்வங்களின் அழுகைக் குரலால் நிறைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com