[X] Close

இலங்கை செல்லும் அமைச்சர்கள் குழுவுக்கு கோரிக்கை 

Request-to-the-Council-of-Ministers-of-Sri-Lanka

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை செல்லவுள்ள நிலையில், மீனவர்களில் வாழ்வாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

நாளை நடைபெறவுள்ள இந்தியபெருங்கடல் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 2நாள் பயணமாக, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், சுரேஷ் பிரபு உள்ளிட்டோர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. அந்த குழு மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். அப்போது, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வுக்காணும் வகையிலும் அமைச்சர்கள் குழு பேச வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை நிபந்தனையின்றி மீட்டுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close