[X] Close

கேரளாபோல உ.பி. மாறினால் என்னவாகும்? யோகி ஆதித்யநாத்துக்கு பினராயி விஜயன் பதிலடி

இந்தியா

-If-UP-Turns-Into-Kerala------Pinarayi-Vijayan-Sneers-At-Yogi-Adityanath

"கேரளாவைபோல உத்தரப் பிரதேசம் மாறினால் மதத்தின் பெயரால் மக்கள் கொல்லப்பட மாட்டார்கள்" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

imageimage


Advertisement

அதில் அவர், "கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருவேளை, பாஜகவுக்கு நீங்கள் வாக்களிக்க தவறிவிட்டால் கேரளா, மேற்கு வங்கம், காஷ்மீர்போல மாறிவிடும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் இந்த வீடியோ பதிவுக்கு ட்விட்டர் மூலமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்திருக்கிறார். அதில் அவர் கூறுகையில், "யோகி ஆதித்யநாத் பயப்படுவதுபோல உத்தரப் பிரதேசம் கேரளா போல மாறினால், மக்களுக்கு சிறப்பான கல்வி, மருத்துவ வசதிகள் கிடைக்கும். சமூக மேம்பாடு உறுதிப்படுத்தப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத நல்லிணக்கமான சமூகம் அமையும். அதை தான் உத்தரப்பிரதேச மக்களும் எதிர்பார்க்கிறார்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சும், அதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலடியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close