Published : 10,Feb 2022 07:07 PM

கேரளாவில் பரவும் குரங்கு காய்ச்சல்: அதிகாரிகள் எச்சரிக்கை

Monkey-fever-spreads-in-Kerala-as-COVID19-Infection-falls-and-authorities-warn

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் குரங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு இந்தக் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. 

நடப்பு ஆண்டில் முதல் முறையாக கேரளாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான முதல் நபராகியுள்ளார் அந்த இளைஞர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குரங்குக் காய்ச்சல் நோய், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இது குரங்குகளிடமிருந்து பரவுகிறது. இந்த க்காய்ச்சல் பருவகால காய்ச்சலாக இந்தியாவின் தென் பகுதியில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்