Published : 10,Feb 2022 10:41 AM

கொரோனா கிருமியை இந்த வாயுவால் அழிக்க முடியுமா? ஆய்வு சொல்வதென்ன!

Nitric-oxide-could-reduce-COVID-19-patients-need-for-ventilators

நைட்ரிக் ஆக்சைடு வாயுவை நுகர்வது மூலம் கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ் கோவிட் 2 வைரஸை அழிக்க முடியும் என கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையும் அமிர்த விஸ்வ வித்யாபீட உயிரி தொழில்நுட்ப பள்ளியும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அமிர்த விஸ்வ வித்யா பீடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நைட்ரிக் ஆக்சைடை நுகர்வதால் கொரோனா வைரஸ் கிருமி அழிவதாகவும் அதே நேரம் உடலுக்குள் உள்ள செல்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமிர்தா மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு நைட்ரிக் ஆக்சைடு கொண்டு சிகிச்சை தரப்பட்டதாகவும் இதில் அவர்கள் உடல் நிலையில் வேகமான முன்னேற்றம் தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Nitric oxide could reduce patients' need for ventilators | khou.com

கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் ஆய்வு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட்ரிக் ஆக்சைடு வாயு ஏற்கனவே சில வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமிர்த விஸ்வ வித்யாபீடம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்